உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பகண்டை கூட்ரோட்டில் வாக்காளர்களிடம் திருத்தப்பணி படிவம் வழங்கல்

பகண்டை கூட்ரோட்டில் வாக்காளர்களிடம் திருத்தப்பணி படிவம் வழங்கல்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிக்கான படிவம் வழங்கும் பணி நேற்று துவங்கியது. வாக்காளர் பதிவு அலுவலர் சுமதி, வாணாபுரம் தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் பகண்டைகூட்ரோட்டில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கினர். அப்போது, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தேவதாஸ், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள் உடனிருந்தனர். வாக்காளர்களுக்கு படிவம் வழங்கும் பணி இன்றும் நடக்கிறது. தொடர்ந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, கடந்த 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, தகவல்களை கேட்டறிவர். வாக்காளர்கள் சரியான விபரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து, கையொப்பம் பெற்று, பி.எல்.ஓ., செயலியில் பதிவேற்றம் செய்வர். டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற உள்ளது. வாணாபுரம் தாலுகாவிற்குட்பட்ட வாக்காளர்கள் படிவம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் தாலுகா அலுவலக கட்டுப்பாட்டு அறை 04151-235400 என்ற எண்ணை அலுவலக நாட்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை