திருக்கோவிலுார் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி ஆய்வு செய்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். திருக்கோவிலுார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி வருடாந்திர ஆய்வுப்பணி மேற்கொண்டார். கோப்புகளை ஆய்வு செய்து பின்னர் வழக்கறிஞர்களுடன் கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து நீதிமன்ற கட்டடங்களை ஆய்வு செய்து, நீதிமன்ற ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி இருசன் பூங்குழலி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் திருக்கோவிலுார் சார்பு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரேம்நாத், இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரசன்னா, மேஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். இதில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.