உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுகாதார பணியாளர்கள் மறுவாழ்வு மாவட்ட அளவிலான கண்காணிப்பு கூட்டம்

சுகாதார பணியாளர்கள் மறுவாழ்வு மாவட்ட அளவிலான கண்காணிப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சுகாதார பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், சுகாதாரப் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் முன்னேற்றம், துாய்மைப் பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் குழந்தை க ளின் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தமிழ்நாடு துாய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் சுகாதாரப் ப ணி யாளர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து தனித்தனியாகக் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சுகாதாரப் பணியாளர்களின் மேம்பாட்டிற்காக அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்துவதுடன், அரசின் நலத்திட்டங்கள் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து சென்று சேருவதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணாளன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ