மேலும் செய்திகள்
சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23-Oct-2024
திருக்கோவிலுார் : சாத்தனுார் அணை 88 சதவீதம் நிரம்பியதால், உபரி நீர் வினாடிக்கு 1600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.தென்பெண்ணையாற்றின் குறுக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சாத்தனுார் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 119 அடி, (7,321 மில்லியன் கன அடி) இதில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 3090 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் 115.25 அடி (6,495 மில்லியன் கன அடி) நீர் இருப்பு உள்ளது. இது 88.71 சதவீதம் ஆகும்.அணையிலிருந்து வினாடிக்கு 1,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று மதியம் 12:00 மணி நிலவரப்படி, திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 650 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இவை ராகவன் வாய்க்கால், பம்பை வாய்க்கால், மலட்டாறுகளில் திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம் நுாற்றுக்கணக்கான ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
23-Oct-2024