தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஈஸ்வரன் கோவில் அருகே தி.மு.க., 4ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.நகர செயலாளர் டேனியல்ராஜ் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் மனோபாலன் வரவேற்றார். உளுந்துார்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் பேச்சாளர் புவியரசி, இளம் பேச்சாளர் ரோஜா சிறப்புரையாற்றினர்.நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், திருநாவலுார் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், மாவட்ட வரத்தகர் அணி அமைப்பாளர் செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் கலா சுந்தரமூர்த்தி சாந்தி மதியழகன், மாலதி ராமலிங்கம், விஜயபூபதி, செல்வகுமாரி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் குருராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகவேல், நகர பொருளாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.