உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்தூர்பேட்டையில் தி.மு.க., தொகுதி அலுவலக திறப்பு

உளுந்தூர்பேட்டையில் தி.மு.க., தொகுதி அலுவலக திறப்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை, சென்னை சாலையில் தி.மு.க., தொகுதி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் வேலு தலைமை தாங்கி, அலுவலகத்தை திறந்து வைத்தார். தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.மலையரசன் எம்.பி., நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், வசந்தவேல், முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், நகர செயலாளர் டேனியல் ராஜ், ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லையா, துரைராஜ், ஆசிர்வாதம், முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் வீரபாண்டியன், நகர அவை தலைவர் சிவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்ராஜ், துணை அமைப்பாளர் பாண்டியன், மகளிர் அணி அமைப்பாளர் கலாசுந்தரமூர்த்தி, மாணவரணி துணை அமைப்பாளர் குருராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் ஜெகதீசன், தங்க விசுவநாதன், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், துணை தலைவர் சம்ஷாத், நகராட்சி கவுன்சிலர்கள் மாலதி ராமலிங்கம், சாந்தி மதியழகன், முருகவேல், குருமனோ, ராஜேஸ்வரி சரவணன், செல்வகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை