மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி வழங்கல் ..
08-Apr-2025
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டிணம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, மலையரசன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் அண்புமணிமாறன் வரவேற்றார். தலைமை பேச்சாளர் புவியரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊராட்சி தலைவர் ஜோதிபன்னீர், துணைத்தலைவர் கலைச்செல்விகுமார், முன்னாள் தலைவர் மணி, கிளை செயலாளர்கள் சேதுபதி, அன்பரசு, சக்தி வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாவு நன்றி கூறினார்.
08-Apr-2025