மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க கூட்டம்
13-May-2025
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில் தி.மு.க., சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். துணை சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் அஸ்வினி செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர் பிச்சைபிள்ளை, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜோசப், பா௹க், செல்வி பாலகிருஷ்ணன், பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், சேகர், சுபாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் 4 ஆண்டு சாதனை குறித்து விளக்கிப் பேசினர்.கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், சங்கராபுரம் வடக்கு ஒன்றியம் சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
13-May-2025