உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., நிவாரண உதவி

வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., நிவாரண உதவி

திருக்கோவிலுார்: கனமழையால் வடமருதுாரில் வீடு இடிந்த குடும்பத்திற்கு தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி நிவாரண உதவி வழங்கினார். திருக்கோவிலுார் அடுத்த வடமருதுார் ஊராட்சியில் கனமழை காரணமாக சுப்பிரமணி என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. வீடு இடிந்த குடும்பத்தினரை தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி நிவாரண உதவிகளை வழங்கினார். அரசின் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், ஒன்றிய செயலாளர்கள் சடகோபன், தீனதயாளன், ரவிச்சந்திரன், பிரபு, லூயிஸ் நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ