தி.மு.க., இனிப்பு வழங்கல்
கள்ளக்குறிச்சி: துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதையடுத்து சின்னசேலத்தில், கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தங்கவேல், துணைச் செயலாளர்கள் சோலைமுத்து, கண்ரோஸ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சின்னசேலம் கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, சுதா, ஊராட்சி தலைவர்கள் சிவஞானம், சசிகலா தனவேல், இளைஞரணி எழில்வசந்தன், ஒன்றிய பொருளாளர் சக்திவேல் பலர் பங்கேற்றனர்.