உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச ஸ்கூட்டருக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் மாற்றுத் திறனாளி நல அலுவலர் எச்சரிக்கை

இலவச ஸ்கூட்டருக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் மாற்றுத் திறனாளி நல அலுவலர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டும் என மாற்றுத்திறனாளி நல அலுவலர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணி செய்திக்குறிப்பு:மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க, முதல் கட்டமாக, பதிவு செய்து, அரசு விதிகளின் படி தகுதி வாய்ந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச ஸ்கூட்டர் பெற சங்கம், அமைப்பு, அரசியல் வாதிகள் மற்றும் ஏஜன்ட்டுகளிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குமாறு சில சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பரிந்துரை செய்கின்றனர். பரிந்துரை செய்யும் அனைத்து நபர்களுக்கும் வழங்காமல், தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் சிலர் அவதுாறு பரப்புகின்றனர்.கடந்த 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோருக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.எனவே, இதுவரை ஸ்கூட்டர் பெறாத, இரு கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளை வழங்கி இலவசமாக ஸ்கூட்டர் பெற்று பயனடையலாம்.அரசு வழங்கும் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை விற்பதும், வாங்குவதும் சட்ட விரோதமாகும். குறிப்பாக, இணைப்பு சக்கரத்தை அகற்றி விட்டு பயன்படுத்துவது தண்டணைக்குரிய குற்றமாகும்.அரசு வழங்கிய ஸ்கூட்டர்களை பதிவு செய்த மாற்றுத் திறனாளி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி