உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே, போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மேலுாரில் உள்ள டி.எஸ்.எம்., ஜெயின் தொழில்நுட்ப கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., பிரிவு சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் டி.எஸ்.எம்., ஜெயின் கல்வி குழும செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஈஸ்வரன் தங்கராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, எய்ம்ஸ் டாக்டர் புகழேந்தன் தங்கராசு பங்கேற்று போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை மற்றும் பின் விளைவுகள் குறித்து பேசினார். மேலும், 'மனஸ் போர்ட்டல்' குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பேராசிரியர்கள் சுரேஷ், முருகன், பெரியசாமி, சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை