உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமாள் கோவிலில்  ஏகாதசி உற்சவம் 

பெருமாள் கோவிலில்  ஏகாதசி உற்சவம் 

கள்ளக்குறிச்சி : ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த ஏகாதசி வழிபாட்டில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை நடந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை