உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு

காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த ஈரியூர் கிராமத்தில் காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற கூலித் தொழிலாளி இறந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 66; கூலித் தொழிலாளி. இவரது மனைவி அனுசுயா, 49; இருவரும் மகன் பிரகாஷுடன் வசித்தனர். கடந்த 13ம் தேதி பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது மாமனார் வீடான கண்டாச்சிமங்கலம் சென்றிருந்தார். பொன்னுசாமி, அனுசுயா இருவரும் ஈரியூர் கிராமத்தில் இருந்த நிலையில், சமையலறையில் இருந்த சிலிண்டரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்று இரவு 10:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. இது தெரியாத நிலையில் சமையலறைக்குச் சென்ற பொன்னுசாமி, விளக்கேற்ற தீப்பெட்டி மூலம் கொளுத்தியுள்ளார். காஸ் வெளியேறியிருந்ததால் தீப்பற்றி வீடு முழுதும் பரவியது. இதில் பொன்னுசாமி, அனுசுயா இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொன்னுசாமி அதிக காயங்களுடன் இருந்ததால் மே ல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ