ஸ்கூட்டர் மோதி மூதாட்டி பலி
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே ஸ்கூட்டர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து மனைவி அசோதை, 80; இவர், கடந்த 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு அடரி மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக கனங்கூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் அறிவழகன் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர், மூதாட்டி அசோதை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அசோதையை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூதாட்டி அசோதை இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.