மேலும் செய்திகள்
பாலிதீனை தடுக்க பெண்கள் பறக்கும் படை
16-Dec-2024
ரிஷிவந்தியம் பகுதியில் தேர்தல் பணியாற்றிய பறக்கும் படையினருக்கு ரூ. 8,500 மட்டுமே பயணப்படி வழங்கப்பட்டிருப்பது பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்களுக்கு குறிப்பாக பறக்கும்படை உள்ளிட்ட பிரிவில் பணியாற்றிய போலீசார், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்பட்டு வருகிறது.சங்கராபுரம், திருக்கோவிலூர் தொகுதிகளில் பணியாற்றிய பறக்கும் படை அலுவலர்களுக்கு ரூ. 20,500 முதல் 24, 500 வரை அடிப்படை சம்பளத்தின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது.அதே நேரம் ரிஷிவந்தியம் தொகுதியில் பணியாற்றிய பறக்கும் படையினருக்கு ரூ. 8,500 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த போலீசார் உள்ளிட்ட அலுவலர்கள் ரிஷிவந்தியம் தொகுதி, சங்கராபுரம் தொகுதி, திருக்கோவிலூர் தொகுதிகளில் பணியாற்றிய நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் ஊதியம் குறைவாக வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரபட்சமின்றி தேர்தல் படியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிஷிவந்தியம் தொகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
16-Dec-2024