உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இடி தாக்கியதில் மின் சாதன பொருட்கள் சேதம்

இடி தாக்கியதில் மின் சாதன பொருட்கள் சேதம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூரில் இடி தாக்கி ரூ.3 லட்சம் மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் சேதமானது. சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அதில் காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் இடி தாக்கி 15க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், மிக்சி, மின்விசிறி, லேப் டாப் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் சேதமடைந்தது. சேத மதிப்பு ரூ.3 லட்சம். பாதிப்பு குறித்து மின்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை