உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி

 அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில், உலக மரபு வார விழாவை முன்னிட்டு, திருக்கோவிலுார் தொல்லியல் அருங்காட்சியகம், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கல்வெட்டுகளை படியெடுப்பது மற்றும் படிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். ஆசிரியர்கள் அள்ளி, காமாட்சி, மஞ்சுளா, சூர்யா ஆகியோர் மாணவிகளை ஒருங்கிணைத்தனர். இதில் 50 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்