மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
04-Nov-2025
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
04-Nov-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
04-Nov-2025
அக்ராயபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
04-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி 60 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், சிறப்பு காவலர்களாக பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: லோக்சபா தேர்தலையொட்டி, 60 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், சிறப்பு காவலராக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எனவே, விருப்பமுள்ள திட காத்திரமான முன்னாள் படைவீரர்கள் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களது அசல் படைப்பணிச்சான்று, அடையாளஅட்டை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். சி.எஸ்.டி., கேண்டீனில் வேலை நாட்களில் பெயர் பதிவு செய்யப்படும்.விடுமுறை நாட்களிலும் பதிவு செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04146 - 220524 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். படைப்பணியினை விட்டு வெளிவந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு தேர்தல் காலத்தில் பணிபுரிய உரிய ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025