உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பழையனுார் கிராமத்தில் பண்ணை பள்ளி நிகழ்ச்சி

பழையனுார் கிராமத்தில் பண்ணை பள்ளி நிகழ்ச்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தில் வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில் பண்ணை பள்ளி நிகழ்ச்சி நடந்தது.வேளாண் அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கி துறையின் மானிய திட்டங்களை விளக்கினார். பட்டு வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர் ராம்குமார், மல்பெரி சாகுபடி தொழில் நுட்பங்களை விளக்கினார். உதவி வேளாண் அலுவலர் வினோத், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா,லோகபிரியா ஆகியோர் ஒருங்கிணைந்த கூட்டு பண்ணையம் அமைத்தல் குறித்து பேசினார்.பண்ணை பள்ளி நிகழ்ச்சியில் பெரம்பலுர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் 35 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !