உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளியை தரம் உயர்த்த கோரி டவரில் ஏறி விவசாயி போராட்டம்

பள்ளியை தரம் உயர்த்த கோரி டவரில் ஏறி விவசாயி போராட்டம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி, மொபைல் போன் டவரில் ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார். திருக்கோவிலுார் அடுத்த முதலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 54; விவசாயி. இவுர், கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் குறித்து அவ்வப்பொழுது அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது வழக்கம். அதேபோல் ஊரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கல்வித்துறை மற்றும் ்ரீவருவாய் துறை அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்துள்ளார். இந்நிலையில், பள்ளியை தரம் உயர்த்த கோரி நேற்று காலை 10:30 மணியளவில் கிராமத்தில் உள்ள மொபைல் போன் டவர் மீது ஏறி, ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த திருக்கோவிலுார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டுமே இறங்குவேன் என கூறினார். அதையடுத்து, தொழிலதிபர் கார்த்திகேயன் மற்றும் கிராம மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பகல் 1:20 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு, டவரில் இருந்து கீழே இறங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி