உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

டிப்பர் லாரி மோதி விவசாயி பலி

சின்னசேலம்: காலசமுத்திரம் அருகே மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் விவசாயி இறந்தார். கடலுார் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மா.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜா, 50; இவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு விதை சோளம் வாங்கிக் கொண்டு தனது மொபட்டில் சொந்த ஊர் திரும்பினார். காலசமுத்திரம் ஆடு வளர்ப்பு பண்ணை அருகே சென்ற போது, எதிரே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரகாஷ், 29; ஓட்டி வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதி, 500 மீட்டர் இழுத்து சென்றது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சென்ற கீழ்க்குப்பம் போலீசார் ராஜாவின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை