உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரண்டாம் போக சாகுபடிக்கு பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க விவசாயிகள் தீர்மானம்

இரண்டாம் போக சாகுபடிக்கு பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க விவசாயிகள் தீர்மானம்

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கான 2ம் போக உரிமை நீர் மார்ச் மாதம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.திருக்கோவிலுார் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கான 2ம் போக உரிமை நீர் சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திறப்பது வழக்கம். இந்த ஆண்டும் அதற்கான உரிமை நீர் வழங்க வேண்டி, திருக்கோவிலுார் அணைக்கட்டில் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.நீர்வளத்துறை விழுப்புரம் செயற்பொறியாளர் சோபனா தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் பக்தவச்சலம், சிவகுமார், வெங்கடேசன், சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மார்ச் மாதம் 16ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை 14 நாட்களுக்கு தொடர்ந்து தினசரி 900 கன அடி வீதம் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், அடுத்து 31ம் தேதியிலிருந்து ஏப்ரல் 1ம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு தினசரி 600 கன அடி நீரும், 2ம் தேதியிலிருந்து 3ம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு 688 கன அடி நீர் என மொத்தம் 1200 மில்லியன் கன அடி நீர் இரண்டாம் போக சாகுபடிக்கு திறக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் மூலம் விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.உதவி பொறியாளர்கள் விக்னேஷ் குமார், மனோஜ், கபிலன், கார்த்திக் மற்றும் நிர்வலதுறை அலுவலர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை