உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், தாலுகா வாரியாக 'சோலார் ட்ரையர்' வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:பெரியசிறுவத்துார் - இந்திலி சாலையில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும், மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏரிக்கரைகளில் பனை விதை நட வேண்டும்.நடப்பாண்டு மக்காச் சோளம், நாட்டுகம்பு மற்றும் மரவள்ளி பயிருக்கான கொள்முதல் தொகை பல மடங்கு குறைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.எனவே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.தற்போது மழை பெய்வதால் பயிர்களை காய வைக்க முடியவில்லை, எனவே, தாலுகா வாரியாக 'சோலார் ட்ரையர்' வழங்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.முன்னதாக, அப்பகுதியில் அமைக்கப்பட்ட வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் மானியவிலையில் 'பேட்டரி ஸ்பிரேயர்' ஆகியவற்றை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை