மேலும் செய்திகள்
தொடர் மழை நிரம்பும் ஏரிகள்
31-Aug-2024
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதி விவசாயிகள் கீரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதியில் நெடுமானுார், காட்டு கொட்டாய், செட்டியந்துார், பொய்குனம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கீரை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.முருங்கைகீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, பசலை கீரை, முளைக்கீரை, பருப்பு கீரை, வெந்தய கீரை, சிறு கீரை, வல்லாரை கீரை, அகத்திக் கீரை, புதினா, கொத்தமல்லி, துாதுவலைக் கீரை போன்ற கீரை வகைகளை சாகுபடி செய்துள்ளனர்.குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு தினசரி அறுவடை செய்து கட்டு கட்டி சங்கராபுரம் உழவர் சந்தை மற்றும் சங்கராபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் வார சந்தைகளில் கட்டு 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.இதன் முலம் தினசரி குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைப்பதால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் கீரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
31-Aug-2024