மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் வரத்து சரிவு
13-Aug-2025
சங்கராபுரம்: கல்வராயன்மலை பகுதியில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சங்கராபுரம் அருகே கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட பாலப்பட்டு, தும்பை, வடபாலப்பட்டு, மோட்டாம்பட்டி, பாச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மஞ்சள் பயிர் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஈரோடு லோக்கல், டி.எஸ்.ஆர்., 1 மற்றும் 2, கோ 1 மற்றும் 2 ஆகிய ரக மஞ்சள் பயிர்கள் நன்கு வளர குறைந்த பட்சம் 7 மாதம் முதல் 9 மாத காலம் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்யும் போது ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை ஈரமான மஞ்சள் கிடைக்கிறது. விவசாயிகள் சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு மஞ்சளை கொண்டு சென்று, வேகவைத்து உலர்த்தி காய வைக்கின்றனர். காய்ந்த மஞ்சள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ. 2 முதல் 3 லட்சம் வரை லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் மஞ்சள் பயிரினை சாகுபடி செய்து வருகின்றனர்.
13-Aug-2025