உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இயற்கை முறையில் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

இயற்கை முறையில் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஏரி பாசனம், கிணற்று பாசனம் என முப்போகமும் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகள் கால்நடை எரு, தழைகளை அடி உரமாக போட்டு சாகுபடி செய்து வந்தனர்.காலப்போக்கில் செயற்கை உரங்கள் வரத்தால் விவசாயிகள் அவற்றை பயன்படுத்த துவங்கினர்.இதனால் பொது மக்கள் பல்வேறு நோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.இதனால் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் செயற்கை உரங்களை தவிர்த்து, மீண்டும் இயற்கை முறையில் பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை