உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கோரிக்கை மாநாடு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கோரிக்கை மாநாடு

கள்ளக்குறிச்சி: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கோரிக்கை மாநாடு நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் காதர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தவமணி, செம்மலை, மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இந்திரகுமார், நாகராஜன், அருள்ஜோதி, முன்னிலை வகித்தனர். நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில துணை தலைவர் செந்தில்முருகன் துவக்க உரையாற்றினார். உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முருகன், மகேஸ்வரன், ஜெகன், ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சாமிதுரை, வீரபுத்திரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், உயர்மட்ட குழு உறுப்பினர் சங்கரலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தனி பாதுகாப்பு சட்டம் இயற்றுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்தல், பணிகள் மேற்கொள்ள உரிய காலஅவகாசம் வழங்குதல், நில அளவைத்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்குதல், ஜூலை 1ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அறிவித்து அரசாணை வெளியிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடந்தது. வரதராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை