உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உங்களை தேடி உங்கள் ஊரில் வாணாபுரத்தில் கள ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் வாணாபுரத்தில் கள ஆய்வு

கள்ளக்குறிச்சி; வாணாபுரத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட கள ஆய்வு பணிகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கள ஆய்வு பணிகள் நடக்கின்றன. அதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் தேவைகள், அரசு அலுவலகங்களின் வசதிகள், செயல்பாடுகள், திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதுமட்டுமின்றி, மாவட்ட அளவிலான அலுவலர்களும் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த பணிகளுக்கு பின்னர், ரிஷிவந்தியம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !