உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா

ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், எம்.பி., மலையரசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் வேலு, கோவி செழியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது; பட்டப்படிப்பை முடித்த 117 மாணவர்கள், 78 மாணவிகள் என 195 பேருக்கு பட்டம் வழங்கப்படுகிறது.பட்டம் பெற்றவர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கும், சமூகத்திற்கும் உரிய பங்களிப்பை வழங்கி, நாட்டை உயர்வடைய செய்ய வேண்டும். மாணவ, மாணவிகள் நலன் கருதி கல்லுாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என பேசினார். தொடர்ந்து, அமைச்சர் வேலு பேசியதாவது; கல்லுாரியில் பட்டம் பெற்ற அனைவரும் விடா முயற்சியுடன் போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு, அ ரசு துறைகளில் உயர் பதவிக்கு செல்ல வேண்டும். உயர்கல்வி படிக்க இயலாத வறுமை நிலையில் உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். பட்டதாரிகள் தான் நாட்டின் சிற்பிகள். நீங்கள் அனைவரும் நாளைய சமுதாயத்தில் ஒரு அடையாளமாக உருவாக வேண்டும். அப்துல்கலாம் கூறியது போல பெரிய கனவுகளை காணுங்கள், அப்போது தான் வாழ்வில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என பேசினார். தொடர்ந்து, கடந்த 2020 - 23ம் கல்வியாண்டில் கல்லுாரியில் பயின்றவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல கல்லுாரி கல்வி இயக்குநர் மலர், கல்லுாரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி