மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
02-Aug-2025
சங்கராபுரம்: எஸ்.வி.பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராம திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 28ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று கொடியேற்றுதல் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பத்மசாலியர் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் ராஜி, மாவட்ட செயலாளர் குசேலன், ஊராட்சி தலைவர் தனக்கோட்டி, தர்மகர்த்தா கோவிந்தசாமி, நிர்வாகிகள் நாகையன், மணி, கலைவாணன், ரமேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
02-Aug-2025