உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவில் கலப்படங்களை அறிதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சண்முகம், உணவு பகுப்பாய்வாளர் சரவணன் ஆகியோர் தினமும் உணவு சாப்பிடும் முறைகள், உணவில் கலப்படத்தை அறிதல், கலப்படம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்தல், கீரை, பழம் மற்றும் இயற்கை சார்ந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது குறித்து பேசினர்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சண்முகம், சுகாசினி, முகேஷ்பிள்ளை, முருகப் பிள்ளை, காரிமுனிசா, ஜெகநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி