உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய கூட்டம்

சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் சத்துணவு பணியாளர்கள் சங்க ஒன்றிய கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில பொருளாளர் ரவி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன், ஒன்றிய தலைவர் சுமதி, நிர்வாகிகள் அன்னக்கிளி, பாக்யா, வள்ளி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேட்டு வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் செல்லதுரை, மாநில துணை பொது செயலாளர் காமராஜ், சத்துணவு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் ராசேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ராஜேஸ்வரி, துணை தலைவர்கள் சுகுணா, ஜெயகாந்தன், பூங்கொடி, சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை