உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வன உரிமைகள் குழு பயிற்சி வகுப்பு

வன உரிமைகள் குழு பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில், பழங்குடியினர் திட்டங்களை செயல்படுத்துவதில், துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைகள் குழு அமைப்பது தொடர்பாக பயிலரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பில் வருவாய் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில், வன உரிமை பாதுகாப்பு சட்டம், துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், தனிநபர் உரிமைகள், கிராம சபை கூட்டுதல், நீண்ட கால மற்றும் குறுகிய கால செயல்பாடுகள், பழங்குடியின கிராமங்களில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.பயிற்சி வகுப்பில் துறை அலுவலர்கள் முறையாக பயின்று பழங்குடியினர் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பாகபணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், தாசில்தார் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை