உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஏமப்பேரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

 ஏமப்பேரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் புறவழிச்சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கலத்திலான சிலை நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். 8.5 அடி உயரம் கொண்ட வெண்கலத்தால் ஆன கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருக்கு நினைவு பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சால்வை மற்றும் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அன்பில்மகேஷ், கணேசன், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி நகர சேர்மன் சுப்ராயலு, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், நகர துணை சேர்மன் ஷமீம்பானு அப்துல்ரசாக், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், முருகன், ஒன்றிய செயலாளர்கள் சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, ஒன்றிய சேர்மன் அலமேலுஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை