ஆர்.கே.எஸ்., பள்ளியில் நாற்பெரும் விழா
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா, வினாடி-வினா மற்றும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு, முன்னாள் கல்வி அமைச்சர் பிறந்த நாள் என நாற்பெரும் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் மணிவண்ணன், தாளாளர் திருஞானசம்மந்தம், இயக்குநர் மனோபாலா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். தொட்டியம் கரூர் வைஸ்சியா வங்கி கிளை மேலாளர் முரளிகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். கல்வி நிறுவனங்களின் ஆளுநர் மதிவாணன், செயலாளர் கோவிந்தராஜ், பள்ளி துணைத்தலைவர் நளினி, நிர்வாக அலுவலர் மோகனசுந்தர், கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்துரை வழங்கினர். கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி பள்ளியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கரூர் வைஸ்யா வங்கி சார்பில் நடந்த தேசிய அளவிலான வினாடி - வினா போட்டியில் அகில இந்திய அளவில் 4, 5 மற்றும் 7ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. கராத்தே பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மஞ்சள், நீலம், ஆரஞ்ச், பச்சை மற்றும் பிரவுன் நிற பெல்டுகள் வழங்கப்பட்டது. முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை சித்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி பொறுப்பாசிரியை ராகேல் ஜாய்ஸ் மேரி நன்றி கூறினார்.