உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண்கள் புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண்கள் புகார்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் போலீசில் புகார் மனு அளித்தனர்.பொருவளூரைச் சேர்ந்தவர் விஜயா கவுரி, 35; அண்ணா நகர் அமுதா, 50; பொரசப்பட்டு ரமேஷ், 25; ஆகியோர் மூங்கில்துறைப்பட்டு போலீசில் அளித்துள்ள புகார் மனு:மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த ஒரு தனிநபர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி