மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை
10-May-2025
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்கம், கோவை கண் சங்கர மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.முகாமிற்கு, தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முகாமிற்கு நிதி அளித்து உதவிய கள்ளக்குறிச்சி கார்த்திகேயன் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் ராஜா கவுரவிக்கப்பட்டார்.முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் நிரஞ்சனா, சிவோஹன் தலைமையிலான டாக்டர்கள் 307 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு தேர்வான, 97 பேர் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ரோட்டரி நிர்வாகிகள் கந்தசாமி, வேலு, சேகர், அரவிந்தன், துரை, அம்பேத்கர், ராமச்சந்திரன், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.பொருளாளர் பாபு நன்றி கூறினார்.
10-May-2025