உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் இரண்டாம் நிலைக் காவலர். சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 3,644 காலிப்பணியிடத்திற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுஉள்ளது. இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்விற்கு http://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 9ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 18-63, நேபால் தெரு, கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04151--295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை