மேலும் செய்திகள்
பல வித வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை
25-Aug-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் கடைவீதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இந்துக்கள் விநாயகர் சிலைகளை புதியதாக வாங்கி வீடுகளில் வைத்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி சங்கராபுரம் கடைவீதியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு அடி முதல் - 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.2 ஆயிரம் விற்பனை செய்யப்படுகிறது. சங்கராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை சூடுபிடித்துள்ளது.
25-Aug-2025