மேலும் செய்திகள்
சோழவந்தானுக்கு வந்த சோதனை
04-May-2025
கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டில் பொது பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகர் பகுதி மக்கள் அளித்த மனு:மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகர் பகுதியில் கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமாக அரசு பாதை புறம்போக்கு இடம் உள்ளது. அந்த வழியை தனி நபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முடியாமலும், பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு சாலையை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.இது குறித்து பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.எனவே, அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
04-May-2025