உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி

மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் மின்சாரம் பாய்ந்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கல்வராயன் மலையில் உள்ள வில்வத்தி புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 47; இவர் கடந்த 12ம் தேதி இரவு 7:00 மணி அளவில் வீட்டில் மின்சாரம் தாக்கி இறந்தார். இதனை அறிந்த உதயசூரியன் எம். எல். ஏ., தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை ஒட்டி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிதியை இறந்தவரின் குடும்பத்தாருக்கு வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், ஆர்.டி.ஓ., முருகன், தாசில்தார் கோவிந்தராஜ், ஒன்றிய சேர்மன் சந்திரன், ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி ஆகியோர் நேரில் சென்று சுப்பிரமணியன் மனைவி கஸ்துாரியிடம் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை