மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் 12ம் தேதி தேரோட்டம்
10-May-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் சித்திரை தேர்திருவிழா பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி துவங்கியது. தினமும் மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிேஷகம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.கடந்த 10ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று தேர் திருவிழாவையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவ மூர்த்திகளை வைத்து, பவனியாக வந்தபின் திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து காலை 9:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ராமானுஜ பக்தர்கள் நாமசங்கீர்த்தன பஜனை செய்தனர். அர்ச்சகர் தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருவிழா பூஜைகளை நடத்தினர்.
10-May-2025