உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராவல் கடத்தல் ஒருவர் கைது

கிராவல் கடத்தல் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே, கிராவல் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி வி.ஏ.ஓ., வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகர் பஸ்நிறுத்தம் வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். கூத்தக்குடியை சேர்ந்த செங்கமலம் மகன் மணிகண்டன்,39; என்பவர் அரசு அனுமதியின்றி ஒரு யூனிட் கிராவல் மண் கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ., வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், மணிகண்டனை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை