உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் 'தீவன அபிவிருத்தித் திட்டம்' நடப்பாண்டில் செயல்படுத் தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் பயனடைய விண்ணப்பிக்கலாம். சிறு குறு விவசாயிகளுக்கு மானியத்தில் 80 எண்ணிக்கையில் உள்ள மின் விசையில் இயக்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு, நடப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்திட வேண்டும்.மேலும், அனைத்து இனங்களிலும் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை