மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம்: 440 மனுக்கள் குவிந்தன
01-Oct-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 362 மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, வேளாண் துறை, காவல் துறை, ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின் வாரியம் தொடர்பான கோரிக்கை மற்றும் புகார்கள் என 362 மனுக்கள் பெறப்பட்டது.மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள், பங்கேற்றனர்.
01-Oct-2024