மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
10-Apr-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட, 26 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண உத்தரவிடப்பட்டது. மாவட்ட போலீஸ் துறையில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள், தீர்வுகள், முடிவு பெறாத புகார்கள் குறித்த குறைதீர் கூட்டம் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தலைமையில் நடந்தது.இதில், பொதுமக்களிடமிருந்து 26 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை செய்து உடனடி தீர்வு காண போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.இதில், ஏ.டி.எஸ்.பி., சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
10-Apr-2025