மேலும் செய்திகள்
மண்ணெண்ணெய் குண்டு வீசிய வாலிபர் மீது 'குண்டாஸ்'
16-Feb-2025
கோவில் உண்டியல் உடைப்பு
18-Feb-2025
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகில் மளிகை கடையில் பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா, மடப்பட்டை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் செல்வம், 40; இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 16ம் தேதி, வியாபாரம் முடித்து, கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல,கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் இருந்த, 500 ரூபாய், 5 லிட்டர் எண்ணெய் பாக்கெட், 5 அரை கிலோ ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள்உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Feb-2025
18-Feb-2025