உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராயப்பனுார் துவக்க பள்ளியில் வகுப்பறை கட்ட பூமிபூஜை

ராயப்பனுார் துவக்க பள்ளியில் வகுப்பறை கட்ட பூமிபூஜை

கள்ளக்குறிச்சி; ராயப்பனுாரில் துவக்கப் பள்ளி வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., சுமதி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் தங்கம் சாமிநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளர் ராமு, தி.மு.க., கிளைச் செயலாளர்கள் தனபால், பாலன், ஒன்றிய துணைத் தலைவர் கண்ரோஸ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி