உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

கச்சிராயபாளையம் ; எலியத்துார் கிராமத்தில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் நேற்று எலியத்துார் கிராமத்தில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயசங்கர், 40; என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 7 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி